கடந்த 2022 ஆம் ஆண்டு ரிஷப் செட்டி நடிப்பில் காந்தாரா என்ற திரைப்படம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கி வருகிறது. இதற்கான கடைசி கட்ட படப்பிடிப்பு இப்போது கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் ஹெரூர் வனப்பகுதியில் கடந்த 2-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் காட்டிற்குள் வெடிபொருட்களை பயன்படுத்தியதாகவும், தீ வைத்து சுற்றுச்சூழலை மாசு படுத்தியதாகவும் அங்குள்ள கிராம மக்கள் படப்பிடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பட குழுவுக்கும், கிராமத்தினருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து படப்பிடிப்பை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று பட குழு மீது கிராம மக்கள் காவல்துறையினிடம் புகார் அளித்துள்ளனர்.