குமரி மாவட்டம் குழித்துறை அருகே அரசுக்கு சொந்தமான இடத்தில் மகாத்மா காந்தி சிலை உள்ளது. திடீரென்று அந்த சிலை தலைப்பகுதி இன்றி காணப்பட்டது. இந்த செயலை மர்ம நபர்கள் செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து மார்த்தாண்டம் காவல்துறையில் புகார் செய்யப்பட்டது. எனவே காவல்துறையினர் அந்த மர்ம நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.