விழுப்புரம் மாவட்டத்தில் வளவனூர் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் 38 வயதுடைய பெண்ணை கடந்த 2017 ஆம் ஆண்டு 5 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்தப் பாலியல் வழக்கு விசாரணை மகளிர்  கோர்ட்டில் நடந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது, இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 5 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை வழங்கப்படுகிறது. 5 பேருக்கும் தலா 38 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.