மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியை சேர்ந்தவர் அசோக் மாலி. இவர் கர்பா நடனம் ஆடுவதில் வல்லவர். இவரை புனேவின் கர்பா மன்னன் என்று தான் பலரும் அழைப்பார்கள் அந்த அளவிற்கு அசோக் மாலி கர்பா நடனத்திற்கு பெயர் பெற்றவர்.

இந்நிலையில் நவராத்திரி விழாவை முன்னிட்டு தனது மகனுடன் அசோக் மாலி கர்பா நடனம் ஆடிக் கொண்டிருந்தார். மகிழ்ச்சியாக ஆடிக் கொண்டிருந்த அசோக் திடீரென கீழே விழுந்து அசையாமல் இருந்துள்ளார்.

இதனை அடுத்து அவரது நடனத்தை பார்க்கக் கூடியிருந்த கூட்டம் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது. அங்கு அசோக் மாலியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மகிழ்ச்சியாக நடனமாடிக் கொண்டிருந்த கர்பா மன்னன் அசோக் மாலி தனது மகன் கண்ணெதிரே உயிரிழந்தது சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.