
பொறியியல் மேற்படிப்புக்கான GATE நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் அக்டோபர் 12ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு இந்தியா முழுவதும் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 3, 4, 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. விண்ணப்ப பதிவு கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 29ஆம் தேதி நடந்து முடிந்தது. தற்போது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் விருப்பம் உள்ள மாணவர்கள் gate2024.iisc.ac.in என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.