
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றாக திகழ்வது தாய்லாந்து. இந்த நாட்டில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்வதற்காக மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் தற்போது அவர்கள் சட்டப்படி திருமணம் செய்து கொள்ள முழுமையான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நாடு ஒரு சிறந்த சுற்றுலா தளமாக இருப்பதால் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் செல்கிறார்கள்.
அதோடு இந்த நாட்டில் ஏராளமான ஓரினச் சேர்க்கையாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இதன் காரணமாகத்தான் தற்போது ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ள சட்டப்படி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் வருகிற ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வர உள்ளது. மேலும் தைவான் மற்றும் நேபாள் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக தாய்லாந்து நாட்டில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.