இங்கிலாந்தின் வடமேற்கு லண்டனில் உள்ள ரோ கிரீன் பார்க் பகுதியில், ஜெர்மன் ஷெப்பர்ட் நாய், 2 சிறிய நாய்கள் மீது வெறித்தனமாக தாக்குதல் நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளை நிற சிறிய நாயை கடித்துச் சுழற்றிய ஜெர்மன் ஷெப்பர்டை, தடுக்க 2 நபர்கள் ஜெர்மன் ஷெப்பர்ட் மீது தண்ணீர் தெளித்தும் முடியவில்லை. பின்னர், கிரே டிராக் சூட் அணிந்த ஒரு நபர், அந்த நாயின் தனிப்பட்ட உறுப்பில் விரலை நுழைத்து அதை விலக வைத்தார்.

 

அதன் பின்னரும், அந்த நாய் மற்றொரு சிறிய கருப்பு நாயைத் தாக்கியது, இதனால் மேலும் பலர் தலையிட்டனர். முடிவில் அந்த நாயை கட்டுப்படுத்த முடிந்தது, ஆனால் அதற்குள் பார்க் முழுவதும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. தாக்குதலில் காயமடைந்த நாய்களின் நிலைமை தற்போது வரை தெரியவில்லை. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. பலரும் பொறுப்பற்ற நாய் வளர்ப்பு மற்றும் பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.