ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாரப்பன்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் தரமான கல்வி, குடிநீர் வசதி, சுகாதாரமான உணவு, காற்றோட்டத்துடன் கூடிய கட்டடங்கள் இருப்பதால் மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வருகின்றனர். வருகிற 2023-24-ஆம் கல்வி ஆண்டில் அதிகளவில் மாணவிகளை சேர்க்கும் நோக்கத்தோடு ஊர் பொதுமக்கள் சார்பாக சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது இந்த பள்ளியில் சேரும் மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக சைக்கிள் ஒன்று வழங்கப்படும். மேலும் பள்ளிக்கூடத்திற்கு மாணவ-மாணவிகள் வந்து போக வாகனங்கள் வசதி ஏற்படுத்தி தரப்படும் என ஊர் பொதுமக்கள் சுவரொட்டி ஒட்டி, அறிவிப்பு பேனரும் வைத்திருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. பொதுமக்களின் இந்த முயற்சிக்கு ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதே போல வாட்ஸ் அப், முகநூல் போன்ற சமூக வலைதளங்களிலும் இந்த தகவல் வேகமாக பரவி வருகிறது.