
சேலம் மாவட்டம் கிச்சிபாளையம் பகுதியில் வசித்து வரும் 16 வயதுடைய சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் மாணவிக்கும் அதே பகுதியை சேர்ந்த 19 வயது இளைஞனுக்கும் இடையே நட்பு ஏற்பட்டு இருக்கின்றது. இதில் இளைஞர் மாணவியுடன் கொல்லிமலைக்கு சென்று வரலாம் என்று தெரிவித்துள்ளார். அதற்கு மாணவி வீட்டிற்கு தெரிந்தால் பிரச்சனை ஆகிவிடும் என்று கூறி மறுத்துள்ளார்.
ஆனால் இளைஞர் விடாமல் வீட்டிற்கு தெரியாமல் வா பார்த்துக் கொள்ளலாம் என்று கூறவே அங்கிருந்து இருவரும் கொல்லி மலைக்கு சென்றுள்ளனர். பின்னர் சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம் என்று கூறி இருவரும் தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கி இருக்கின்றனர். அப்போது மாணவிக்கு தெரியாமல் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து 3 இளைஞர்களும் சேர்ந்து கூட்டு கற்பழிப்பு செய்துள்ளனர்.
இதனையடுத்து மாணவியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரது பெற்றோர் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது தனது நண்பன் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அவரது நண்பர்களுடன் சேர்ந்து தன்னைக் கூட்டு பலாத்காரம் செய்ததாக மாணவி தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் 3 இளைஞர்களையும் கைது செய்து அவர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ததோடு சிறையில் அடைத்துள்ளனர்.