உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் நகரில் 11ஆம் வகுப்பு பயின்று வரும் சிறுவன் அபினவ். அபினவின் நண்பன் ஒரு பெண்ணை காதலிப்பதும், அந்தப் பெண்ணின் ஆபாச புகைப்படங்களை தனது செல்போனில் பதிவு செய்து வைத்திருப்பதையும் அறிந்த அபினவ் அவனது நண்பரின் செல்போனில் உள்ள காதலியின் ஆபாச புகைப்படங்களை தனது செல்போனிற்கு அனுப்பி உள்ளார். பின்னர் நண்பனின் காதலியை தனியாக அழைத்து அந்தப் புகைப்படங்களை காட்டி தான் சொல்லும்படி எல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என மிரட்டி உள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த காதலி தனது காதலனிடம் கூறியுள்ளார். இதனால் அபினவ் மீது கோபமடைந்த அவனது நண்பர் அபினவை தனியாக காளி நதிக்கரைக்கு அழைத்துச் சென்று சுத்தியலால் அடித்து கொலை செய்துள்ளார். கொலை குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று அபினவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் கொலை செய்த சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.