
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் உங்களை பற்றி ஒரு கேள்வி கேட்டாலே உங்களுக்கு அரசியல் புரிதல் இல்லை என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டு வருவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,
இருக்கலாம் என பதில் சொல்லி, விடாமல் சிரித்த சீமான்…. எதோ சொல்லணும்னு சொல்லுவது தான். எனக்கு அரசியல் புரிதல் தான் இல்லை. என் தம்பி கிட்ட அரசியலே இல்லை. எனக்கு சுதந்திரமாக ஒன்றை பேச முடிகிறது. அவருக்கு ஏதாவது பேச முடியுமா ? சொல்லுங்கள்…
நானும், அவரும் ஒரு தர்க்கம் செய்வோம். இந்த 10 ஆண்டுகாலம் பாரதிய ஜனதா ஆட்சியில் ஒரு சாதனை…. உருப்படியான ஒரு செயலை சொல்லிட சொல்லுங்கள். எதை பற்றியும் பேச முடியாது. இங்கு வண்டி ஓட்டலாம்… திமுக ஊழல் செய்து விட்டது… லஞ்சம் பெற்று விட்டது…. சரி அதிமுக பெற்ற ஊழல்… அதையும் சொல்ல வேண்டும்.
ஒரு நேர்மையான் அதையும் சொல்லணும்ல… அவர் என்ன சொல்லுகிறார்? அதை நீங்கள் வெளியிடங்கள் என்று சொல்கிறார்… நீ தானே லிஸ்ட் வைத்திருக்கிறார். கொடு நான் வெளியிடுகிறேன்…. எனனிடம் இல்லை. என்ன இருக்கிறது ? எதைப் பற்றி பேச தகுதியோ, நேர்மையோ வைத்திருக்கிறார்கள். அதாவது பாருங்கள் என தெரிவித்தார்.