திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின்,  ”1963யை” குறிப்பிட்டு அண்ணன் துரைமுருகன் அவர்கள் சொன்னது போல்…..  திமுகவிற்கு திருப்புமுனை தந்தது திருவண்ணாமலை இடைத்தேர்தல் தான். அப்பொழுது ஆளும் கட்சியினுடைய வேட்பாளர் இருக்கிறார்.  காங்கிரஸ் கட்சி ஆளும் கட்சி. நம்முடைய வேட்பாளர் ப. உ. ச அவர்கள். தேர்தல் பொறுப்பாளர் யாருன்னு கேட்டா ? நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்…

அன்னைக்கு திருவண்ணாமலை கொடுத்த வெற்றி தான் 1967-ல் நாம் ஆட்சி அமைக்க அடித்தளமாக இருந்தது. அதேபோல் 2021 தேர்தலில் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தது. வரவேற்புரை ஆற்றுகிற போது வேலு அவர்கள் பெருமையோடு குறிப்பிட்டு சொன்னார். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பயணத்தை இதே திருவண்ணாமலை இருந்து தான் நான் தொடங்கினேன்.

அதற்குப் பின்னால் தொகுதி தொகுதியாக போய் கோரிக்கை மனுக்களை வாங்கினேன். உங்கள் கவலைகளை….கோரிக்கைகளை… எதிர்பார்ப்புகளை… என்கிட்ட ஒப்படைச்சிருங்க; ஆட்சி அமைந்தது 100 நாளில் தீர்வு காண்பேன் என்று சொன்னேன்.  ஸ்டாலின் கிட்ட மனு கொடுத்தால் நிச்சயம் நிறைவேறும் என்கிற நம்பிக்கையோடு லட்சக்கணக்கான மக்கள் மனு கொடுத்தாங்க.

அந்த அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் வெள்ளம்  போல அன்றைக்கு மக்கள் திரண்டார்கள். அன்றைக்கு வெற்றி தீபத்தை திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெறுவதற்கு அடித்தளம் அமைத்த ஊர் தான் இந்த திருவண்ணாமலை என்பதை பெருமையோடு குறிப்பிட்டு காட்ட விரும்புகின்றேன் என் தெரிவித்தார்.