Goat படப்பிடிப்பின் பணியின் போது நடிகர் அஜித் அவர்களை படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு சந்தித்ததுடன் அவருடன் புகைப்படம் எடுத்தும் இணையத்தில் வெளியிட்டு இருந்தார். படத்தின் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில் நடிகர் அஜித்தை இயக்குனர் வெங்கட் பிரபு சந்தித்திருப்பது சாதாரண ஒன்றாக இருக்க வாய்ப்பில்லை.

நடிகர் அஜித் அவர்களும் இந்த படத்தின் ஒரு அங்கமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது என ரசிகர்கள் கூறிவரும் நிலையில், இந்த fan theory குறித்து இயக்குனர் வெங்கட் பிரபு பதில் அளித்துள்ளார். அதில், Goat படத்துல ஒரு மிகப்பெரிய தருணம் இருக்கு ஆனால் அது என்னவென்று சொல்ல மாட்டேன்.

அது அஜித் அவர்களின் குரலாக இருக்கலாம். காட்சியாக இருக்கலாம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அது கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் ஒரு தருணமாக படத்தில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.