இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் விஜய். இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் என்ற திரைப்படத்தில் தற்போது நடித்துள்ள நிலையில், கடந்த 5 ஆம் தேதி உலகம் முழுவதும் படம் ரிலீசானது. இந்தப் படத்தில் நடிகர்கள் பிரபுதேவா, அஜ்மல் அமீர், பிரசாந்த், சினேகா மற்றும் மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள நிலையில், நடிகர் விஜய் தந்தை மற்றும் மகன் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார்.

இந்த படம் வெளியான நாளில் இருந்து பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வருகிறது. இந்நிலையில் படத்தின் முதல் நாள் கலெக்ஷனில் உலகம் முழுவதும் 126 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. மேலும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

இன்னும் திரை அரங்குகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதன்படி படம் ரிலீஸ் ஆகி 4 நாட்கள் முடிவடைந்த நிலையில்
இதுவரை அதன் மொத்த வசூல் 288 கோடியை பெற்றுள்ளது. இது மாபெரும் வசூல் வேட்டை ஆகும், எனினும் வரும் வாரங்களில் சுமார் 500 கோடி வரை வசூல் ஆகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.