கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பார்வதிபுரம் அருகே உள்ள பிளசன்ட் நகரில் கலைக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருநெல்வேலி மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி டாக்டர் புனிதவதி சென்னை அரசு மருத்துவ கல்லூரியில் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை வேலை முடிந்து வீட்டிற்கு வந்த கலைக்குமார் வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பத்தை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதனையடுத்து வீட்டுக்குள் சென்று பார்க்கும் போது பீரோவில் இருந்த 87 பவுன் தங்க நகை 3 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.