பிரபல நடிகரான தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் ரிலீஸ் ஆகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தை தனுஷ் இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தை தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அது மட்டும் இல்லாமல் தனுஷின் அக்கா மகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. கோல்டன் ஸ்பேரோ என்ற பாடலில் பிரியங்கா மோகன் சூப்பராக டான்ஸ் ஆடியுள்ளார். அந்த பாடல் கடந்த 12 நாட்களில் கோல்டன் ஸ்பேரோ பாடல் யூடியூப்பில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.