
நடிகர் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் அஜித்துடன் த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன்தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகியது.
கடந்த 28ஆம் தேதி படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசர் வெளியாகி இதுவரை வெளியான தமிழ் படங்களின் டீசரில் 24 மணி நேரத்தில் அதிக பார்வையார்களை கடந்த டீசர் என்ற சாதனையை இந்த படம் படைத்துள்ளது. உலக அளவில் இந்த படம் 2000 திரைகளில் திரையிடப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் அஜித்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் புகழ்ந்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில்,” தங்களுடைய கடின உழைப்புக்கும், விடாமுயற்சிக்கும் பலன் கிடைக்கும் சார். இது மிகவும் கடினமான விடாமுயற்சியுடன் ஒரு விளையாட்டு. நீங்கள் இதற்காக அர்ப்பணித்து கடினமாக உழைத்துள்ளீர்கள். இது மிகப்பெரிய விஷயம். உங்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்துமே கிடைக்கும். உங்களை நேசிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.