தமிழ் திரை உலகில் பிரபலமான நடிகராக தனி ரசிகர் கூட்டத்தையே வைத்திருப்பவர் அஜித் குமார். இவர் தனது 63 வது படமான குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் திரிஷா, பிரசன்னா, பிரபு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஏப்ரல் 10ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரபல மலையாள நடிகரான சைன் டாம் சாக்கோ ‘குட் பேட் அக்லி’ படத்தில் இணைந்துள்ளதாகவும் இந்த படத்தில் அவருக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.