
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நகர்புற உள்ளாட்சிகளிளும் நாள்தோறும் சுமார் 15,000 டன் குப்பையானது சேகரிக்கப்படுகிறது. இதில் 55% குப்பைகள் மக்கும் குப்பையாகவும், மீதமுள்ளவை மக்கா குப்பையாகவும் உள்ளது. இவற்றை நேரடியாக அரசின் நுண்ணுயிர் உர ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து மக்கும் குப்பைகள் மூலமாக இயற்கை உரமானது தயாரிக்கப்படுகிறது. இந்த இயற்கை உரங்கள் மண்ணின் காற்றோட்டம் மற்றும் நீரை தேக்கி வைத்துக் கொள்ளும் தன்மையை மேம்படுத்துகிறது.
அது மட்டும் இல்லாமல் ரசாயன உரத்தில் இருந்து சத்துக்களை விடுவிக்கும் தன்மையை பயிர்கள் ஏற்றுக்கொள்ளும் விதமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. தரமான உரங்களின் மூலமாக விளைவிக்கப்படும் பயிர்கள் தங்களுடைய உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக உள்ளது. தமிழக அரசின் இந்த இயற்கை உரத்திற்கு செழிப்பு என்று பெயரிடப்பட்டு இதற்கான அறிமுக விழாவானது நடத்தப்பட்டது. இந்த அறிமுக விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் செழிப்பு இயற்கை உரத்தை அறிமுகம் செய்து அதனுடைய விற்பனையும் தொடங்கி வைத்துள்ளார்.