இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் மாதந்தோறும் விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ஏப்ரல் மாதத்திற்கு 16 நாட்கள் விடுமுறை ஆக அறிவித்துள்ளது. மேலும் வங்கி சேவைகளை பயன்படுத்துவதில் ஏற்படும் அசம்பாவிதங்களை தவிர்க்க இதனை முன்கூட்டியே வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி ஏப்ரல் 1 பொது விடுமுறை, ஏப்ரல் 5 பாபு ஜெகஜீவன் ராமன் பிறந்த நாள், ஏப்ரல் 10 மகாவீர் ஜெயந்தி, ஏப்ரல் 14 அம்பேத்கர் பிறந்த நாள்/ தமிழ்நாடு தமிழ் புத்தாண்டு, ஏப்ரல் 15 பெங்காலி புத்தாண்டு, ஏப்ரல் 16 போக் பிஹூ, ஏப்ரல் 18 புனித வெள்ளி, ஏப்ரல் 21 காரியா பூஜை, ஏப்ரல் 29 பகவான் ஸ்ரீ பரசுராமன் ஜெயந்தி, ஏப்ரல் 30 பசவ ஜெயந்தி/அக்ஷய திரிதியை ஆகியவை உடன் 2 சனிக்கிழமைகள் மற்றும் 4 ஞாயிற்றுக்கிழமைகள் என சேர்த்து மொத்தம் 16 நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளது.

மேலும் இந்த விடுமுறை நாட்களில் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் பரிவர்த்தனைகள் மேற்கொள்வதற்கு எந்தவித இடையூறும் ஏற்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.