இந்தியாவில் விவசாயிகளுக்கு என்று பிரதமர் மோடியின் பி எம் கிசான் திட்டம் கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் சொந்த நிலங்கள் வைத்துள்ள விவசாய குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதி உதவி வேளாண் மற்றும் அது சார்ந்த வேலைகளுக்கான செலவுகளை செய்து கொள்வதற்காக வழங்கப்படுகிறது. ஒரு தவணைக்கு தலா 2000 ரூபாய் வீதம் ஒரு ஆண்டிற்கு மொத்தம் 3 தவணைகள் வழங்கப்படுகின்றன.

அதன்படி 20-வது தவணை வருகிற ஜூன் மாதம் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து வழக்கமாக ஜூன் மாதத்தில் தான் தவணை வழங்கப்படுகிறது. ஜூன் மாதத்தில் 19வது தவணை வழங்கப்பட்டு 4 மாதங்கள் ஆகின்றது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. எனவே விவசாயிகள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.