இஸ்ரேல், ஈரானுக்கு இடையில் தற்போது போர் மூழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  இந்த பதற்றமான சூழ்நிலைனால் வளைகுடா பகுதிகளுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் குறித்து கேள்வி எழும்பியுள்ளது.

இதே சூழ்நிலை தொடர்ந்தால் கச்சா எண்ணெய் உற்பத்தின் அளவு குறைந்து பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துக் கொண்டே சென்று விடுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை குறித்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி சமீபத்தில் தனது கருத்துக்களை தெரிவித்தார். பெட்ரோல், டீசல் விலை குறித்து ஹர்தீப் சிங் புரி கூறியதாவது, நம்மை சுற்றியுள்ள அயல்நாடுகளில் ஏற்படும் போர் தாக்குதல்களினால் கச்சா எண்ணெய் உற்பத்தியில் எந்த வித பாதிப்பும் இதுவரை ஏற்படவில்லை.

கச்சா எண்ணெய் விநியோகம் தொடர்ந்து பிரேசில், காசாயானா போன்ற நாடுகளில் இருந்து விநியோகம் நடந்து கொண்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் கச்சா எண்ணெய் விநியோகம் குறித்து எந்த வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை. இந்தியா எந்த ஒரு சூழ்நிலையிலும் மாற்று வழியை உருவாக்கும். வரும் காலங்களில் கச்சா எண்ணெயின் விலை சற்று குறைந்தே காணப்படும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும். இவ்வாறு அமைச்சர் ஹர்ஷத் சிங் புரி தெரிவித்துள்ளார்.