மக்களின் வாழ்வாதாரத்தில் விவசாயம் முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்நிலையில் இயற்கை சீற்றங்கள் போன்றவற்றால் பயிர் விளைச்சல்கள் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக விவசாயிகளுக்கு “நெற்பயிர் காப்பீடு” திட்டத்தை மத்திய மற்றும் மாநில அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்திற்கு பதிவு செய்யாத விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, தற்போது விண்ணப்பிக்க கூடிய இறுதி நாளை நீடிப்பதற்காக வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் ஆலோசனை செய்தது. இந்நிலையில் தற்போது ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதாவது சம்பா, தாளடி/பிசானம் போன்ற நெற் பயிர்களுக்கு காப்பீடு வழங்கும் தேதியை நீடிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தனர்.

அதன்படி அனைத்து விவசாயிகளும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பட வேண்டும் என்பதற்காக நெற்பயிர் காப்பீடு திட்டத்தின் கடைசி தேதியை 30.11.2024 வரை நீடித்தது அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் தஞ்சாவூர், திருச்சி, திருப்பூர், செங்கல்பட்டு, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கரூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், ராமநாதபுரம், சேலம், திருவள்ளூர், திருவாரூர், விழுப்புரம், தேனி, திருப்பத்தூர், அரியலூர், கடலூர், ஈரோடு, காஞ்சிபுரம், மதுரை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சிவகங்கை, திருவண்ணாமலை, வேலூர், ஆகிய மாவட்டங்களில் இதுவரை இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யாத விவசாயிகள் வருகிற சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுச் பொது சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். அது மட்டுமன்றி ஏற்கனவே பதிவு செய்த விவசாயிகள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டாம் என்றும் அரசு வலியுறுத்தியுள்ளது.