தமிழர் திருநாளான பொங்கல் இந்த ஆண்டு அடுத்த வாரத்தில் வர இருப்பதால் பயணிகள் பலரும் தங்களது சொந்த ஊருக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர். இதனால் பயண நெரிசலை தவிர்ப்பதற்காக தெற்கு ரயில்வே திருநெல்வேலி-தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்க அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதில் ரயில் வழித்தட எண் 06092 திருநெல்வேலி- தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் ஜனவரி மாதம் 12, 19 மற்றும் 26 ஆகிய 3 ஞாயிற்றுக்கிழமைகளில் திருநெல்வேலியில் இருந்து மதியம் 3:30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரத்திற்கு சென்றடையும்.

இதனை அடுத்து ரயில் வழித்தட எண் 06091 என்ற ரயில் தாம்பரத்திலிருந்து, திருநெல்வேலிக்கு இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஜனவரி மாதம் 13, 20 மற்றும் 27 ஆகிய 3 திங்கட்கிழமைகளில் தாம்பரத்திலிருந்து மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4:55 மணிக்கு திருநெல்வேலிக்கு வரும்.

ரயில் வழித்தட எண் 06093 தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு ஜனவரி மாதம் 13ஆம் தேதி இரவு 10.30 புறப்பட்டு மறுநாள் மதியம் 12:30 மணிக்கு கன்னியாகுமரியை அடையும். இதனைத் தொடர்ந்து ரயில் வழித்தட எண் 06094 கன்னியாகுமரியில் இருந்து தாம்பரத்திற்கு இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஜனவரி மாதம் 14ஆம் தேதி மாலை 3:30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.15 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தை அடையும்.