
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை whatsapp, instagram போன்ற சமூக ஊடகங்களை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இது போன்ற சமூக ஊடகங்களில் அவர்கள் அதிக நேரத்தை செலவிடுகின்றனர். மெட்டா நிறுவனம் தொடர்ந்து புதுப்புது அப்டேட்டுகளை வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு புதிய அப்டேட்டை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதாவது நாம் வாட்ஸ்அப்பில் ஒருவருக்கு மெசேஜ் டைப் பண்ணும் போது, மேலே உள்ள பெயர் குறிப்பிட்டுள்ள இடத்தில் ‘typing’ என்ற சொல் காட்டப்படும். இப்போது அதை மாற்றி, மற்ற சமூக ஊடகங்களில் டைப் செய்யும் போது வரும், திரையில் காட்டப்பட்டுள்ள அந்த 3 புள்ளிகள் (…) போல வாட்ஸ்அப்பிலும் டைப் இண்டிகேட்டரை அறிமுகப்படுத்த சோதனை மேற்கொண்டு வருவதாக மெட்டா தெரிவித்துள்ளது.