
தமிழகம் முழுவதும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. அதோடு பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் வெயில் காலம் போன்ற காரணங்களால், தமிழ்நாட்டில் தடை இல்லாமல் மின்சாரம் வழங்கும் வேலையில் மின்சார வாரியம் ஈடுபட்டுள்ளது. அதனால் தமிழகத்தில் அடுத்து 2 மாதங்களுக்கு மின்சார தடை இருக்காது என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும் இதனை உறுதி செய்யுமாறு துறை சார்ந்த மின் பொறியாளர்களுக்கு மின் தொடரமைப்பு கலக இயக்குனர் ஜெ.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். மின்சார தடை எதுவும் ஏற்பட்டால் உடனடியாக சரி பார்க்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிர படுத்தவும் அனைத்து மின்வாரியங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அவசரகால வேலைகளுக்கு ஏற்றவாறு தேவையான ஊழியர்களையும், பொருட்களையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.