
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இந்த நிலையில் கூகுள் பே உள்ளிட்ட யுபிஐ செயலிகளில் பரிவர்த்தனை செய்போரிடம் குயிஷிங் என்ற புதிய முறையில் பணம் திருடப்படுவதும் இதற்கு க்யூ ஆர் கோடு பயன்படுத்தப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதாவது மர்ம நபர் அனுப்பும் க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்ததும், சம்பந்தமில்லாத இணையதள பக்கத்திற்கு செல்வதும், பிறகு வங்கி பணம் திருடு போவது உறுதியாகி உள்ளது. எனவே எச்சரிக்கையுடன் இருக்க சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.