கூகுள் பே மூலமாக தனிநபர் கடனை எளிதாக பெற முடியும். 10000 ரூபாய் முதல் 9 லட்சம் ரூபாய் வரை இதில் கடன் பெறலாம். Google pay வாடிக்கையாளர்களுக்கு கடன்களை வழங்குவதற்கு பல கடன் வழங்கும் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இதில் நீங்கள் கடன் பெற முதலில் கூகுள் பே செயலிக்கு செல்ல வேண்டும். அதில் Get Loan என்ற ஆப்சன் இருக்கும். அதில் apply now என்ற விருப்பத்தை கிளிக் செய்ததும் ஒரு புதிய பக்கம் திறக்கும்.

அதில் கடன் விவரங்கள் அனைத்தும் இடம்பெற்றிருக்கும். கடன் தொகையின் அடிப்படையில் இஎம்ஐ மாறும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். கடன் காலம் 6 மாதங்கள் முதல் நான்கு வருடங்கள் வரை பெறலாம். இந்த கடனை பெறுவதற்கு உங்கள் மின்னஞ்சல் முகவரி, உங்கள் இருப்பிட முகவரி, பான் எண், ஆதார் எண் உள்ளிட்டவற்றை பதிவிட்டு உங்கள் தகுதியினை தெரிந்து கொள்ளலாம்.