திருநெல்வேலியில் இருந்து அரசு பேருந்து புளியங்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் தென்காசி நகர எல்லையில் வாய்க்கால் பாலம் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையின் இடது புறம் இருக்கும் இரும்பு மின் கம்பங்கள் மீது மோதி சாலையோர டீக்கடைக்குள் புகுந்து பேருந்து நின்றது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அலறி சத்தம் போட்டனர். இதற்கிடையே பேருந்து மோதியதால் உயர் அழுத்த மின்கம்பிகள் அறுந்து விழுந்தது.

இதனால் மின் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. டீ கடைக்குள் இருந்த நபர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுபற்றி அறிந்த மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மின் விநியோகத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.