
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் பரிட் ஷித்கர் பகுதியில் நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளியில் சுஜாதா யாதவ் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் பல ஆண்டுகளாக பள்ளிக்கு வராமல் இருந்துள்ளார். இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து மாவட்ட அரசு பள்ளிகளின் தலைமை அதிகாரியான ஆஷா சவுத்ரிக்கு புகார் அளிக்கப்பட்டது. அவரது தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. இந்த நிலையில் ஆசிரியை கடந்த ஆறு ஆண்டுகளாக பள்ளிக்கு வராதது தெரியவந்தது.
சுமார் 2920 நாட்களுக்கு முன்பு அவர் வேலையில் இருந்துள்ளார். அந்த 2920 நாட்களில் வெறும் 759 நாட்கள் மட்டும்தான் பள்ளிக்கு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் தினம்தோறும் அவரது வருகை பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு சம்பளமும் சரியாக கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பள்ளியின் முதல்வர் உடந்தையாக இருந்துள்ளார். இந்த நிலையில் ஆசிரியர் சுஜாதா யாதவும் அவருக்கு உதவிய முதல்வரையும் அதிகாரிகள் பணியிடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தனர். இருவர் மீதும் வழக்குகள் பதிவாகி விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.