கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இருந்து அரசு பேருந்து திருநெல்வேலி நோக்கி கடந்த 13ஆம் தேதி மாலை சென்று கொண்டிருந்தது.இந்தப் பேருந்து அழகாபுரம் வழியாக சென்று கொண்டிருந்தபோது அங்கிருந்த இரண்டு பெண்கள் கை அசைத்து பேருந்தை நிறுத்துமாறு கூறினர் ஓட்டுநர் பெண்களை கவனித்தும் நிறுத்தத்தில் நிற்காமல் சென்றுள்ளார்

இதனை பார்த்துக் கொண்டிருந்த இளைஞர்கள் சிலர் பேருந்தை பின் தொடர்ந்து நிறுத்தி ஓட்டுனரிடம் விவாதித்துள்ளனர்.இச்சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. இது தொடர்பாக அரசு போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் அந்த பேருந்தின் ஓட்டுனர் ஸ்டீபன் மற்றும் நடத்துனர் மணிகண்டன் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.