
சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அழகு மாவட்ட இயக்க மேலாண்மை அழகு வட்டார இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் மற்றும் வட்டார இயக்க மேலாளர் (ஒப்பந்த முறையில் )காலியாக உள்ள பணியிடங்களை பூர்த்தி செய்யும் வண்ணம் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
விண்ணப்பிக்க கடைசி தேதி 11/7/2023 மாலை 5.45 மணிக்குள் இதை தவறவிடும் பட்சத்தில் இந்த தேதிக்கும், நேரத்திற்கும் பின்னால் அனுப்பக்கூடிய விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது.
சம்பளம் : ரூ 12000 முதல் ரூ 15,000 வரை
தேவையான தகுதிகள் : ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் MS ஆபீஸ் உள்ளடங்கிய ஏதேனும் கணினி படிப்பில் குறைந்தபட்சம் ஆறு மாத சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள் சார்ந்த பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு 28க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
குறிப்பாக சிவகங்கை மாவட்டத்தில் வசிப்பவராக மட்டும் இருத்தல் வேண்டும்.
குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் இப்பணி சார்ந்து வேறு ஏதேனும் பணியில் அனுபவம் இருத்தல் நல்லது.
பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே இப்பணிக்கு தகுதியானவர்கள். விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள ஆவணம் மூலம் முழுமையான தகவல்களை தெரிந்து கொள்ளவும்.