
விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்டது சின்ன மூப்பம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளியில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவ – மாணவிகள் 10க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இருந்து வருகிறார்கள். இந்த பள்ளி குடிநீருக்குக்கும், சமையலுக்காகவும் ஒரு சின்டெக்ஸ் தொட்டி இருக்கிறது.
பள்ளி விடுமுறை நாளான நேற்று பள்ளியின் சின்டெக்ஸ் தொட்டியில் மாட்டு சாணத்தை மர்ம நபர்கள் கலந்துள்ளனர். சிற்றுண்டி செய்வதற்காக நேற்று மாலை இரவு சமையல் பணி செய்யக்கூடிய பெண்கள் பள்ளிக்கு சென்று உள்ளார்கள். அப்போது அங்குள்ள சின்டெக்ஸ் தொட்டியை திறக்கும் போது துர்நாற்றம் வீசி உள்ளது.
உடனே அங்குள்ளவர்களை பார்க்க சொன்னபோது மாட்டுச்சானம் இருந்துள்ளது. இதனை பள்ளி தலைமை ஆசிரியருக்கு தெரியப்படுத்திய உடன், உடனே தலைமை ஆசிரியர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தார். இந்த சம்பவத்தில் ஈடுபட்டது யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.