
சென்னையிலிருந்து தாம்பரம் நோக்கி செங்குன்றத்திலிருந்து அரசு பேருந்து சென்றது. இதில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர். பேருந்து மதுரவாயல் அருகே செல்லும் பொழுது மேம்பாலத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டில் இருந்து தவறி பாலத்தின் கீழ் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது கவிழ்ந்தது. இதனால் ஆட்டோ முழுவதும் நசுங்கி ஆட்டோ ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
மேலும் பயணிகள் 15 பேருக்கு பலத்த காயமும் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த பயணிகள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தினால் மதுரவாயல் செல்லும் வழியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.