வரி செலுத்துவதற்காக நாள் ஒன்றிற்கு ஐந்து லட்சம் வரை யு பி ஐ மூலம் பண பரிவர்த்தனை செய்ய ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது. போன் பே, கூகுள் பே ஆகிய யூ பி ஐ  செயலிகள் மூலம் தற்போது நாள் ஒன்றுக்கு அதிக பட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வரை பண பரிவர்த்தனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வரி செலுத்துவதற்காக நாள் ஒன்றுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை யு பி ஐ மூலம் பணப்பரிவர்த்தனை செய்ய ரிசர்வ் வங்கி அனுமதி தந்துள்ளது. பெரும்பாலான இதர வகை பணப்பரிவர்த்தனைகளுக்கான உச்சவரம்பு நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாயாக தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.