
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழ்நாடு முழுவதும் நம்ம கிட்ட மிடுக்கா இருந்த காவல்துறை, இன்றைக்கு வெட்கி தலை குனிந்து… ஏன்டா காக்கி சட்டை போட்டோம்… இந்த விடியாத அரசில் என்ற நிலைமையில் வேதனைக்கு தள்ளப்பட்டு… இன்றைக்கு அடிவாங்குற காவல்துறையாக மாறிட்டு. இன்னைக்கு அதான் மிகவும் வேதனைக்குரிய விஷயமா இருக்கு. கட்சியினர் மீது ஸ்டாலின் நடவடிக்கைக்கு அவ்வவ்வப்போது எடுத்தா சரியாய் இருக்கும்.
மாநகராட்சி ஆணையர்கிட்ட கையை நீட்டி பேசி மாமுல் கேட்ட கட்சிக்காரங்க மேல நடவடிக்கை எடுத்துட்டாங்களா..? ஒன்னும் எடுக்கலையே. அதேபோல எத்தனை பேர் கட்சி காரங்க இன்னைக்கு தமிழ்நாட்டுல பாத்தீங்கன்னா… காவல்துறையை மிரட்டுவது… வருவாய் வட்டாட்சியரை மிரட்டுவது…. அதிகாரிகளை மிரட்டுவது… பொதுமக்களை மிரட்டுவது… கட்டப்பஞ்சாயத்து பண்ணுவது இதெல்லாம் வழக்கமாகிவிட்டது.
அதெல்லாம் ஒரு கட்டுக்குள் கொண்டு வரணும்னா… ஒரு கடுமையான நடவடிக்கை …சட்ட நடவடிக்கை எடுப்பதன் மூலம் தான் கட்டுக்குள் கொண்டு வர முடியும். ஆனால் அது மாதிரி நடவடிக்கைகள் இந்த விடியாத திமுக அரசின் உடைய முதலமைச்சர் ஸ்டாலின் எடுதாரா ? ஒரு கட்சிக்காரங்க மேல நடவடிக்கை எடுத்தாரா? அப்ப என்ன அர்த்தம்… ஊக்கப்படுத்துறாரு.
2001 – 2011இல் எங்களுடைய ஆட்சி இருந்தது. எங்களுடைய ஆட்சி இருந்தபோ வந்து அம்மா என்ன கூப்பிட்டு சொன்னாங்க.. கவுன்சிலர்கள் கொஞ்சம் பொது மக்களுக்கு பிரச்சனையா பண்ணிட்டு இருக்காங்க… நமக்கு பார்ட்டி நலனும் முக்கியம். அதனால் பொதுமக்களும் பாதிக்கப்படக்கூடாது. அதனால ஒரு மீட்டிங் ஒன்னு ஏற்பாடு பண்றேன், நீங்களும் வாங்க என சொன்னாங்க. போனால் கவுன்சிலர்களை உக்கார வச்சு சொன்னாங்க…
இதோட நீங்க உங்க வாலெல்லாம் அடக்கி வச்சுக்கோங்க.. வால சுருட்டி வச்சுக்கோங்க.. நீங்க சுருட்டி வைக்கலைன்னு வச்சுக்கோங்களேன்… உங்களுக்கு எப்படிப்பட்ட ட்ரீட்மென்ட்? தருவேன்னு சொன்னாங்க ? அப்படிப்பட்ட ஒரு லீடர். கட்சிக்காரர்களை அடக்கி, ஒடுக்கி வச்சாங்க. அடக்கி ஒடுக்கின்னா என்ன ? மக்களுக்கு பணி செய்யுங்கள். மக்களுக்கு இடையூறு செய்யாதீங்க. அதுதான் முக்கியம்.அந்த அளவுக்கு அம்மாவின் நடவடிக்கை இருந்தது என தெரிவித்தார்.