கெவின் ஜெனிடலின் என்ற 15 வயது சிறுவன் வெஸ்பா பைக்கில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக வேகமாக வந்த கார் ஒன்று அவரின் பின்னால் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இருந்துள்ளார். கெவின் இறுதிச் சடங்கை அவரது குடும்பத்தினர் இத்தாலியில் உள்ள காஸ்டல் பிரான்கோ வெனட்டோவில் நடத்தினர்.

கெவின் இந்த இறுதிச் சடங்கு நிகழ்வில் அவனது தாத்தா ஜூனோ ஜென்டிலின் (66) டெக்னோ இசையில் இசைக்குழுவை அமைத்து நடனமாடி தனது பேரனின் இறுதிச்சடங்கை நடத்தியது அங்கு  உள்ள அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஆனால் இது குறித்து கெவின் தாத்தா அந்த ஊரின் ஊடகமான கேரியர் டெல் வெனாட்டோவிடம் கூறியதாவது,”என்னை பொருத்தவரை நான் நடனமாடியது மிகவும் சரிதான். நான் நடனமாடி முடித்த போது எனது பேரன் கூறியது என் காதில் முழுமையாக கேட்டது.

அவர் என்னிடம் நன்றி தாத்தா என கூறினார். நான் கெவின் பெற்றோர்களின் முழு சம்மதத்தோடு தான் அந்த இறுதிச் சடங்கில் நடனமாடினேன். எனக்குள் புதைந்த சோகம் அந்த நடனத்தின் மூலம் தான் வெளியே வந்தது. இவ்வாறு ஜூனோ கூறினார்.ஜூனோ நடனமாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகமானவரால் பார்க்கப்பட்டு வருகிறது.