
பாதுகாப்பான சேமிப்பு திட்டங்களில் அஞ்சல் அலுவலகங்களில் உள்ள நிலையான வைப்பு (FD) ஒரு சிறந்த விருப்பமாக உள்ளது. குறைந்த முதலீட்டில் கூட அதிகமான வட்டி பெற்றுக்கொள்ளலாம். தற்போது ரூ. 2 லட்சம் முதலீடு செய்தால், ஐந்து ஆண்டுகளில் 7.5% வட்டி விகிதத்தில், முதிர்வுத் தொகையாக ரூ. 2,89,989 பெறலாம்.
FD திட்டங்கள் மூலமாக, குறிப்பிட்ட காலத்திற்கு வட்டி விகிதங்கள் வழங்கப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் மாதம் அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாவது வட்டி பெறலாம். இதில் நஷ்டம் இல்லாமல், உத்தரவாதம் செய்யப்பட்ட வருமானத்தை பெற முடியும்.
போஸ்ட் ஆபீஸில் FD கணக்குகளை துவங்க, குறைந்தபட்சமாக ரூ. 1000 முதலீடு போதுமானது. முதலீட்டு காலத்திற்கு ஏற்ப வட்டி விகிதங்கள் மாறுபடும்.