கோயம்புத்தூரை சேர்ந்த பத்மஸ்ரீ விருது பெற்ற இயற்கை விவசாயியான பாப்பம்மாள் நேற்று 109 வயதில் காலமானார். இவருடைய மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக பிரதமர் மோடி, அன்புமணி ராமதாஸ், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்த நிலையில் தற்போது முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் என்னுடைய குடும்பத்தில் ஒருவரை பிரிந்த வலியுடன் தவிக்கிறேன். அவர் தன்னுடைய இறுதி மூச்சு வரையில் சுறுசுறுப்பாக வயலில் இறங்கி வேளாண் பணிகள்‌ செய்தார். அவருடைய மறைவு ஈடுகட்ட முடியாத இழப்பு. பாப்பம்மாளுடன் உரையாடிய ஒவ்வொரு நிமிடங்களும் என் நெஞ்சில் என்றென்றும் நீங்காமல் பசுமையான நினைவுகளாக இருக்கும். மேலும் அவருடைய குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.