ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீ நகரின் கன்வார் பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கும், அங்கு உலாவி வரும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் திடீரென துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இந்த தாக்குதலில் அருகில் இருந்த சில வீடுகள் தீப்பற்றியுள்ளன. இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவியது. இந்த தீ விபத்தில் எந்தவித உயிர் சேதமும் இல்லை.

இதே போன்ற ஏற்கனவே நடந்த துப்பாக்கி சண்டையில் அனந்த்நாக் பகுதியில் ஹல்கன்காலி அருகில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொள்ளப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தகவல் தெரிவித்திருந்தனர். இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட இருவரில் ஒருவர் வெளிநாட்டவர் என்பதும் ஒருவர் உள்நாட்டில் வசிப்பவர் என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடைபெற்று வருவதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.