அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கு 27 வயதான வாலிபர் ஒருவர் தலையில் முடிமாற்று அறுவை சிகிச்சை செய்துவிட்டு விமானத்தில் ஏறி உள்ளார். இந்நிலையில் திடீரென அவரது தலையில் இருந்து ரத்தம் கசிந்துள்ளது. இதனால் விமான பணியாளர்கள் அந்த வாலிபரை விமானத்தில் விட்டு இறங்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் அந்த வாலிபர் விமானத்தை விட்டு இறங்க மறுத்துள்ளார்.

இதனால் விமான பணியாளர்கள் காவல்துறையினருக்கு இது குறித்து தகவல் அளித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விமானத்திற்கு சென்று அவரை கைது செய்ததுடன் அவருடன் வந்த பெண் ஒருவரையும் கைது செய்து விமானத்தை விட்டு கீழே இறக்கினர். இதனால் விமானம் புறப்படுவதற்கு தாமதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் அந்த வாலிபரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை வழங்கி வருகின்றனர்.