
அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு நேற்று முன்தினம் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நான் அமைச்சராக இருந்துள்ளேன். என்னை உலகத்தில் தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக சிறப்பாக பணியாற்றியுள்ளார். கொரோனா காலத்தின் போது அவர் முதல்வராக சிறப்பாக செயல்பட்டார்.
அதன்பிறகு அண்ணாமலை அரசியலில் ஒரு கத்துக்குட்டி. நான் மூன்று முறை ஒரே தொகுதியில் நின்று சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளேன். ஆனால் அண்ணாமலை ஒரு தொகுதியிலாவது வெற்றி பெற்றுள்ளாரா? என்று கூறினார். மேலும் செல்லூர் ராஜூவை மதுரையை தாண்டி வேறு யாருக்கும் தெரியாது என அண்ணாமலை விமர்சித்திருந்த நிலையில் தற்போது அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக செல்லூர் ராஜு பேசியுள்ளார்.