
HCL இல் வேலையுடன் கூடிய B.sc, B.com, BCA, BBA உள்ளிட்ட பட்டப்படிப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு விருப்பமுள்ள எஸ்சி எஸ்டி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். 12 ஆம் வகுப்பில் 2022-23 இல் 60% மதிப்பெண், 2023-24 ஆம் ஆண்டில் 75 சதவீதம் மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். அதே சமயம் குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். HCL மூலமாக நடத்தப்படும் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.