இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா இவர் இளம் நடிகரான விஜய் வர்மாவை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் டேட்டிங் மற்றும் அவுட்டிங் செய்யும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியானது. இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் காதலிப்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டனர். நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் சமீபத்தில் தமன்னா பேட்டி ஒன்றில் பேசியிருந்தார்.

அதில் அவர் கூறியதாவது, முதலில் ரிலேஷன்ஷிப் பற்றி பேசிய அவர், உங்கள் பார்ட்னரின் குணாதசியங்களை எந்த வகையிலும் மாற்று நினைக்காதீர்கள். சின்ன பொய் கூட சொல்லாதீர்கள், நீங்கள் காதலிக்கும் பெண்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் காது கொடுத்து கேளுங்கள். எனக்கு கிப்ட் கொடுத்தால் கோபம் வரும், கிப்ட் கொடுப்பது ஒருவரை ஒரு பொருளுக்குள் அடக்குவது போன்றதாகும்.

ஒரு ரிலேஷன்ஷிப்பில் நேர்மையாக இருக்க வேண்டும் என்றும் காதலை மிகவும் வெளிப்படுத்தவும்  நினைக்கிறேன் என்றும் கூறினார். என்னுடைய பார்ட்னரை கோபப்படுத்தும் எந்த ஒரு விஷயத்தையும் நான் சொல்ல மாட்டேன் என்று கூறினார். அதோடு அவருக்கு சிறுவயதில் இன்னும் 2 காதல்கள் இருந்ததாகவும், அது பிரேக்கப் ஆகியத்திற்குக்கான காரணம் குறித்தும் கூறியுள்ளார்.