‘பாட்டல் ராதா’ என்ற திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் மதுப்பழக்கம் மற்றும் அடிமைத்தனம் குறித்து சிலர் பேசினர். ஆனால் இயக்குனர் மிஷ்கின் மதுப்பழக்கத்தை கொண்டாடுவதாக கூறினார். அதோடு இளையராஜாவின் இசை தான் என்னுடைய போதைக்கு சைட் டிஷ் என்றும், அவர்தான் பலரையும் குடிகாரன் ஆகிவிட்டார் என்றும் பேசுகின்றார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் கண்டனத்தை தெரிவித்தனர். இதையடுத்து ‘பேட் கேர்ள்’ திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் அவர் மன்னிப்பு கேட்டார். இந்நிலையில் இதுகுறித்து நடிகர் விஷால் கண்டனம் தெரிவித்துள்ளார். விஷால் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது, மிஷ்கின் பேசிவிட்டு மன்னிப்பு கேட்டாரா?. அவருக்கு இதுவே வேலையாகி விட்டது. நாம் என்ன பண்ண முடியும்.

சுபாவத்தை மாற்ற முடியாது, மேடை நாகரிகம் என்று ஒன்று இருக்கிறது. அதை தாண்டி கெட்ட வார்த்தை யூஸ் பண்ணா எப்படி? சில பேருடைய சுபாவம் எல்லாம் மாற்ற முடியாது. அவர் பேசுவதை கைத்தட்டி கேட்பது வருத்தமாக உள்ளது. இசையமைப்பாளர் இளையராஜாவை அவன் இவன் என்று பேச யாருக்கும் அதிகாரமோ அறுகதையோ கிடையாது. அவர் கடவுளின் குழந்தை. அவருடைய பாட்டை கேட்டு பல பேர் டிஸ்டர்பன்ஸில் இருந்து வெளியே வந்திருக்காங்க சந்தோஷம் அடைந்து இருக்காங்க.

இத்தனை வருஷத்துல மணி ரத்தினம் மாதிரி எத்தனை டைரக்டரை அவர் ஏத்தி விட்டு இருக்கார்னு தெரியுமா? அவரை அப்படி பேசுவதை நாம் வன்மையாக கண்டிக்கிறேன். யுவன், பவதாரணி, வாசுகி, கார்த்திக் ராஜா எல்லாம் என்னுடைய குடும்பம். அவரை மரியாதை இல்லாமல் பேச யாருக்கும் உரிமை கிடையாது. மன்னிப்பு கேட்டாலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.