அபினவ் அரோரா(10) என்ற சிறுவன் தன்னைத் தானே ஆன்மீகப் போதகர் என்று அறிவித்துக் கொண்டார். அதோடு ஆன்மீக போதனைகளை வழங்கி வருகிறார். இந்த சிறுவனை சமூக ஊடகங்களில் பல லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். இவர் இணையதளத்தில் வைரலாகுவதற்கு கிருஷ்ணர் மற்றும் ராதை பற்றிய சொற்பொழிவு தான் காரணம் என்று கூறுகின்றனர். இந்நிலையில் “பால் சந்த் பாபா” என்று அழைக்கப்படும் இவரை இந்து மத ஆன்மீக தலைவரான சுவாமி ராமபத்ராச்சார்யா விமர்சித்து வருகிறார். அதாவது ஆன்மீக சொற்பொழிவுகளை ஆற்றும் குழந்தைகளை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.

அதற்கு ராமவத்ராச்சார்யா கூறியதாவது, அந்த சிறுவன் “ஒரு முட்டாள்” பகவான் கிருஷ்ணன் அவருடன் படிப்பதாக கூறுகிறார். பிருந்தாவனத்தில் நான் அவரை திட்டி இருந்தேன் என்று தெரிவித்தார். சமீபத்தில் நடந்த ஒரு மத நிகழ்ச்சியின் போது, சுவாமி ராமபத்ராச்சார்யார் முன்பு அந்தச் சிறுவன் நடனம் ஆடியது ட்ரெண்டிங் ஆனது. அப்போது கடுப்பான சுவாமி ராமபத்ரசார்யா அந்த சிறுவனை மேடையில் இருந்து கீழே இறங்க சொன்னார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.