
அசாம் மாநிலத்தில், 12 வயது மைனர் சிறுமி மீது நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கச்சார் மாவட்டம், கட்டிகோரா என்ற பகுதியில் வீட்டின் குளியலறைக்கு சென்ற சிறுமியை, 50 வயதான உறவினர் வயல் பகுதியில் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சம்பவத்திற்கு பின்னர், கிழிந்த ஆடைகளுடன் வீட்டிற்கு வந்த சிறுமி, பெற்றோரிடம் தான் சந்தித்த கொடுமையை விளக்கியபின் மயக்கமடைந்துள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் அடிப்படையில், குற்றவாளி கைது செய்யப்பட்டு, அவருக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.