
தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவரும் நடிகர் மகேஷ்பாபுவின் சகோதரருமான நரேஷ் 2 பெண்களை திருமணம் செய்து விவாகரத்து செய்து கொண்ட நிலையில், 3-வதாக ரம்யா ரகுபதி என்பவரை திருமணம் செய்தார். தற்போது ரம்யா ரகுபதியை விவாகரத்து செய்ய நரேஷ் முடிவு செய்துள்ள நிலையில் விவாகரத்து வேண்டி குடும்ப நல நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் நடிகர் நரேஷ் மற்றும் தென்னிந்திய மொழிகளில் பிரபலமான நடிகையாக இருக்கும் பவித்ரா ஆகியோர் விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார்கள். நடிகை பவித்ரா நரேஷ் 3-வதாக திருமணம் செய்து கொள்கிறார்.

பவித்ரா மற்றும் நரேஷின் திருமணத்திற்கு அவருடைய 3-வது மனைவி ரம்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் நரேஷ் தன்னுடைய மனைவி ரம்யா தன்னை கொலை செய்ய சதி திட்டம் போட்டுள்ளதாக தற்போது குடும்ப நல நீதிமன்றத்தில் புகார் கொடுத்துள்ளார். திருமணம் ஆகி சில நாட்களில் ரம்யா தன்னுடைய சொத்துக்களை அபகரிக்க முயற்சி செய்ததாகவும் தற்போது தன்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் நரேஷ் நீதிமன்றத்தில் புகார் தெரிவித்துள்ளதோடு தனக்கு பாதுகாப்பு வேண்டும் எனவும் கேட்டுள்ளார். மேலும் இந்த விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.