நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திரைத்துறையில் மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெற தான் செய்கிறது என்று கூறியிருந்தார். இதற்கு தற்போது நடிகை விஜயலட்சுமி பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, முதலில் பெண்களை சீமானிடமிருந்து தான் காப்பாற்ற வேண்டும். உதவி கேட்டு போன என்னை ஆபீஸில் வைத்து சீரழித்தவர். கடந்த 2008 ஆம் ஆண்டு என்னுடைய அக்கா குழந்தையை தூக்கிட்டு போயிட்டாங்க என்று கூறி உதவி கேட்டு சீமான் அலுவலகத்திற்கு சென்றேன்.

அப்போது ஆபீஸில் வைத்தே என்னை கதற கதற சீரழித்தார். அதன் பிறகு அவர் 6 முறை மதுரையில் பிணையில் இருக்கும் போது கூட நான் அவருக்கு தேவைப்பட்டேன். இப்படிப்பட்ட எல்லா கேவலமான வேலையையும் செய்துவிட்டு கடந்த வருடம் 50000 கொடுத்து திமுக முன்னாடி இதெல்லாம் பேசாதே என்று கூறினார். என்கூட சப்போர்ட்டுக்கு வந்த வீரலட்சுமியை  மிகவும் கொச்சையாக பேசினார். மேலும் தன்னுடன் குடும்பம் நடத்தி 14 வருடங்களில் என் வாழ்க்கையை சீரழித்து விட்டார் என்று வீடியோ வெளியிட்டு கூறியுள்ளார்.