
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, சட்டப்பேரவை தலைவர் அவர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் எந்த இடத்தில் அமர வைக்க வேண்டும் என்பது என்னுடைய அதிகாரம் என்கிறார், அதை நாங்கள் மறுக்கல. ஆனால் எதிர்கட்சியினுடைய துணைத்தலைவர் எதிர்க்கட்சி தலைவருக்கு அருகில் தான் அமர வைப்பது. இன்னைக்கு எல்லா பத்திரிகைக்கும் தெரியும்…. ஊடகத்திற்கும் தெரியும்…
பல ஆண்டு காலமாக, காலங்காலமாக மரபு. எதிர்க்கட்சி தலைவர் பக்கத்துல தான், எதிர்க்கட்சி துணைத்தலைவரை அமர வைப்பாங்க. அவர வேற எங்கையும் போயி அமர வைக்க முடியாது. ஏனென்றால் எதிர்க்கட்சி தலைவர் வரவில்லை என்றாலோ, உடல்நல குறை ஏற்பட்டாலோ அவருக்கு பதிலாக எதிர்க்கட்சி துணைத்தலைவர் பேசுவது தான் மரபு. அந்த அடிப்படையில் தான் நாங்க கேட்டோம். மற்ற உறுப்பினர்களை எங்க வேணாலும் அமர வைக்கலாம். அது அவருடைய தனிப்பட்ட அதிகாரம்.
ஆனால் எதிர்க்கட்சி துணைத்தலைவரை அவர் கொடுக்கவே இல்ல… எதிர்க்கட்சி துணைத்தலைவர் என்று அறிவிக்கவே இல்ல… இருந்தாலும் அதை கொடுக்க வேண்டும். இருக்கை எதிர்க்கட்சி தலைவருக்கு அருகில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை வழங்க வேண்டும் என்பது தான் கோரிக்கை வச்சோம். ஆனால் அதுக்கு எல்லாம் பேசி மொழுகி, எதாவது ஒரு பதில் சொல்லிடுறாரு. முழுமையான பதில் கிடைக்க மாட்டேங்குது.
சட்டத்தின் ஆட்சி நடக்குது. அவை சட்ட மரபு படிதான் நடக்க வேணும். அவை மரபுப்படி நடக்க வேண்டும். சட்டப்படி நாங்கள் கொடுத்துவிட்டோம். ஒரு கட்சியில் இருந்து நீக்கபட்டவர்கள் எப்படி செல்லும் ? அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கட்சியில் இருந்து நீக்கப்பட்டது செல்லுபடியாகும் என்று உயர்நீதி மன்ற டிவிஷன் பென்ச் தீர்ப்பு கொடுத்து விட்டது. அதையும் கொடுத்திட்டோம். சாக்கு போக்கு சொல்லி இதை நிராகரிக்கிறார்.